பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட். 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-2). சம்பளம்: ரூ.35,400- 1.12,400. வயது: 28க்குள்.
தகுதி: கெமிக்கல்/பயாலஜிக்கல்/மெடிக்கல் லேப் டெக்னாலஜி/பார்மட்டிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். டிரக் டெஸ்டிங் லேப்பில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 26.05.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. இதர பிரிவினருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் மென்டல் ஏபிலிட்டி, பொது அறிவு, ஆங்கில மொழி திறன் தேர்வு மற்றும் விண்ணப்பதாரர் படித்திருக்கும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இதர தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர்.
www.ndtlindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2025.
The post தேசிய ஊக்க மருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் appeared first on Dinakaran.