தேங்கும் குப்பைகள்; சகதிக்காடாக மாறும் கோயம்பேடு சந்தை: வியாபாரிகள் சாலை மறியல்

1 hour ago 1

சென்னை: கோயம்பேடு சந்தையில் குப்பைகளை முறையாக அகற்றாததால் சகதிக்காடாக மாறி வருவதாகக்கூறி காய்கறி வியாபாரிகள் சந்தை வளாகத்துக்குள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்பேடு சந்தையில், காய்கறி விற்பனை வளாகத்தில் 200 பெரிய கடைகள் மற்றும் 1965 சிறிய கடைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 165 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் உருவாகும் குப்பைகளை, சந்தை நிர்வாகம் முறையாக அகற்றாததால் மழை காலங்களில் அதன் மீது பொதுமக்களும், வாகனஙகளும் சென்று சகதிக்காடாக மாறி இருப்பதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சந்தை நிர்வாகத்துக்கும் வியாாரிகள் புகார் அளித்துள்ளனர்.

Read Entire Article