மன்னார்குடி, நவ.22: மழைநீர் தேங்கிய பகுதிகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் மன்னார்குடி நகரத்தில் நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணையர் சியாமளா தலைமையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்றும் பணிகளில் நகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக மன்னார்குடி 31வது வார்டில் வஉசி சாலை முல்லை நகர் இணைப்பு சாலையின் உள் பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிய வழியில்லாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. மழை நீரை உடன டியாக வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் தமிழ்செல்வம் தலைமையில் துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் இந்திராணி, பாரதிராஜா உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரம் மூலம் தற்காலிகமாக வாய்க்கால் வெட்டி தேங்கியிருந்த மழைநீரை அகற் றினர். இதன்மூலம் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப்பட்டது. அப்போது, 31வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆசியாபேகம், வார்டு பிரதி நிதி மகேந்திரன் உள்ளிடோர் உடன் இருந்தனர்.
The post தேங்கிய மழை நீரை அகற்ற தற்காலிக வடிகால் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.