
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அணையில் உள்ள தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்ய நேற்று மாலை தொழிலாளர்கள் 8 பேர் நேற்று சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர்.
தொழிலாளர்கள் தங்கள் பணியை செய்துகொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார், தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,