தெலுங்கானா: ஏரியில் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

6 months ago 20

யாதாத்ரி புவனகிரி,

தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். முன்னதாக ஐதராபாத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று அதிகாலையில் ஜலால்பூரில் இருந்து பூதன் போச்சம்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஏரி ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மணிகாந்த் (21 வயது) என்பவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழந்தவர்கள் வம்சி (23 வயது), திக்னேஷ் (21 வயது), ஹர்ஷா (21 வயது), பாலு (19 வயது), வினய் (21 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article