தெலங்கானா மாநில வனத்துறை மந்திரி சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு

6 hours ago 2

ஐதராபாத்,

 தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி உள்ளார். இவரது மந்திரி சபையில் வனத்துறை பொறுப்பை வகிப்பவர் கொண்டா சுரேகா. சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் தற்போது மீண்டும் ஒரு புது விவாதத்தில் சிக்கியுள்ளார். குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சுரேகா, "இன்று நமக்கு பண்டிகை நாள். அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும்" என்று கூறுகிறார்.

இவரைத் தொடர்ந்து எதிரில் இருந்து பேசிய இவரது உறவுக்கார பெண் ஒருவர், "மது ஆறாக ஓட வேண்டும் அல்லவா? என்று கேட்கிறார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சுரேகா, "பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும். எவ்வளவு பீர் வேண்டுமோ, அவ்வளவு பீர் வாங்கி கொடுக்க வேண்டும். அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும். ஒரு சிலர் அது உள்ளதா என்று கேட்டார்கள்.பிரியாணியுடன் பீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறேன்" என்று கூறுகிறார்.இடையில் புகுந்த மற்றொரு பெண், வாரங்கலில் சுரேகாவின் கணவர் மதுவை ஆறுபோல் ஓடவிடுகிறார். இங்கு சுரேகா அதுபோல் செய்வார்" என்று கூறுகிறார். பெண் மந்திரி இடம் பெற்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி தெலங்கனா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Read Entire Article