தெற்கு லெபனானில் உள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

4 months ago 28

பெய்ரூட்,

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து லெபனானின் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் 2006 போருக்குப் பிறகு ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட இடையக மண்டலத்திற்கு(Buffer zone) வடக்கில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் மூலம், லெபனானின் தெற்கு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read Entire Article