சென்னை: கரோனா பரவலின்போது பாசஞ்சர் ரயில்களுக்கு பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவை வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் 296 பாசஞ்சர் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள், சிறு நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக பாசஞ்சர் ரயில்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் ஓடுகின்றன.