தென்காசி சிவசைலநாதர் கோவில் தேரோட்டம் - பெண்கள் மட்டும் இழுத்த அம்பாள் தேர்

1 day ago 4

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பரமகல்யாணி அம்மன் உடனுறை சிவசைலநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவசைலநாதர், பரமகல்யாணி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

இதில் சுவாமி தேரை ஆண்கள், பெண்கள் சேர்ந்து இழுக்க, அம்பாள் தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

Read Entire Article