சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கும் தென் மாநிலங்களுக்கு வெறும் 15% மட்டும் வரிப் பகிர்வா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார். பீகார், உ.பி., மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு 40% வரிப் பகிர்வு அளிக்கப்படுகிறது. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா? அல்லது ஓரவஞ்சனையா என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாருக்கு ரூ.62,024 கோடி வரிப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களுக்கு ரூ.27,336 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
The post தென் மாநிலங்களுக்கு 15% மட்டுமே வரிப் பகிர்வா?: அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி appeared first on Dinakaran.