தெங்கம்புதூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

3 months ago 22

நாகர்கோவில், அக்.1: தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டுக்கு உட்பட்ட தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 85 பேருக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தலைமை ஆசிரியர் பாலவசீகரன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுயம்புலிங்கம், ராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் லிவிங்ஸ்டன், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், வட்டச் செயலாளர் குணசேகரன், வட்ட பிரதிநிதி ரமேஷ்குமார், நிர்வாகிகள் ஜஸ்டின், கணேசன், தாஸ், ஆசாத், ஜெயபிரகாஷ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தெங்கம்புதூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Read Entire Article