தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

3 months ago 27

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட துணை கலெக்டர் நாராயண சர்மா தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விநாயகா மிஷனின் வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது இந்திய அரசின் “தூய்மையே சேவை’’ – ஸ்வச்தா ஹி சேவா பிரசாரத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டு நல பணித்திட்டம் அமைப்பின் மூலம், பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை இணைந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் ராட்டினக்கிணறு பகுதியில் நேற்று நடத்தியது.
இதில், துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கல்லூரி பொறுப்பு இயக்குநர் முத்துராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட துணை கலெக்டர் நாராயண சர்மா பங்கேற்று, மாணவர்களின் “தூய்மையே சேவை’’ விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், துறை மாணவர்கள் மூலம் “தூய்மையே சேவை’’ என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நாடகம் நடித்தும், கை கழுவும் வழிமுறைகளை நடனத்தின் மூலமும் மக்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறையின் நாட்டுநல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன், ஜூவா மற்றும் சுற்றுச்சூழல் மாணவர் குழு ஒருங்கிணைப்பாளர் தீபிகா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article