தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்க 2வது மாநில மாநாடு

3 days ago 4

 

திருச்செந்தூர், மே 8: தமிழ்நாடு வணிகர் சங்க 2வது மாநில மாநாடு, ‘வணிகர் நல பாதுகாப்பு மாநாடு’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில தலைவர் காமராசு நாடார் தலைமை வகித்து சங்க கொடியேற்றினார். கூடுதல் செயலாளர் யாபேஷ், துணை தலைவர்கள் சுகுமார், மாயன் ரமேஷ், செய்தித்தொடர்பாளர் செல்வின், இணை செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு 3 தையல் இயந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பேசினார். மாநாட்டில், வணிகர்கள் பாதுகாப்பு நலச் சட்டத்தை இயற்ற வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் அகற்றப்பட்ட கடைகளின் வணிகர்களுக்கு கடை வீதிகளில் முன்னுரிமைப்படி கடைகள் ஒதுக்கி கொடுக்க வேண்டும். தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும். தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

ஆறுமுகநேரியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். குலசேகரப்பட்டினம் அனல்மின் நிலைய பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளி வணிகர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதுடன், ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அனைத்து வணிகர்களின் குழந்தைகளுக்கும் கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை வரி, பாதாள சாக்கடை கட்டணங்களை வணிக நிறுவனங்களுக்கு முழுமையாக குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் மாலைசூடி அற்புதராஜ், செல்வக்குமார், பாலாஜி, கீதா இமானுவேல், மாநில துணை தலைவர் சுரேஷ், மண்டல தலைவர் வேலாயுதபெருமாள், திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம், நகர யாதவ வியாபாரிகள் சங்கம், சைவ வேளாளர் வியாபாரிகள் மகமை சங்கம், திருக்கோயில் வளாக சிறு வியாபாரிகள் சங்கம், தூத்துக்குடி வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம், மீளவிட்டான் வியாபாரிகள் சங்கம், குறிஞ்சிநகர் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் ராஜா ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

The post தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்க 2வது மாநில மாநாடு appeared first on Dinakaran.

Read Entire Article