தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓக்கள் மாற்றம்

3 months ago 27

தூத்துக்குடி, செப். 29: தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், வைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி பிடிஓக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.சாத்தான்குளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுரேஷ், வை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ராஜேஷ்குமார், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இதுபோல் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய இப்ராஹிம் சுல்தான், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ஜான்சிராணி, திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் பிறப்பித்துள்ளார்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓக்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article