தூத்துக்குடி, நவ. 28: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (28ம் தேதி ) நடக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் தெற்கு மண்டல அலுவலகத்தில் இன்று (28ம் தேதி ) வியாழக்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மனுக்கள் அளிக்கலாம். இத்தகவலை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
The post தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இன்று மக்கள் குறை தீர் முகாம் appeared first on Dinakaran.