தூத்துக்குடி கடற்கரையில் கண்டறியப்பட்ட புதிய விலாங்கு மீன் இனத்திற்கு ‘தமிழகம்’ என பெயர் சூட்டல்

3 hours ago 2

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் கண்டறியப்பட்ட புதிய விலாங்கு மீன் இனத்திற்கு தமிழகம் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு தேசிய மீன் மரபணு வள நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம், கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது வித்தியாசமான நிறத்தில் இருந்த 2 பெண் விலாங்கு மீன் இனத்தை கண்டறிந்தனர். இது குறித்து அந்த மீன்களை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவை இதுவரையில் கண்டறிப்படாத ஒரு இனமாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் இதனை அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் என அழைத்தனர். தொடர்ந்து இந்த மீன் இனத்திற்கு தமிழகம், தமிழ்நாடு அல்லது தமிழ் என பெயரிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தற்போது அதற்கு தமிழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும இயக்குனர்(பொ) அஜித்குமார் கூறியதாவது: இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும் தேசிய மீன் மரபணு வள பணியகம், விலாங்கு மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கடற்கரையில் ஒரு புதிய வகை விலாங்கு மீன் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மீன் பிற விலாங்கு மீன் இனங்களில் இருந்து வேறுபட்டு உள்ளதா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட விலாங்கு மீன் மற்ற விலாங்குமீன் இனங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு, தமிழுடன் தொடர்புடையதாக தமிழகம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்றார்.

The post தூத்துக்குடி கடற்கரையில் கண்டறியப்பட்ட புதிய விலாங்கு மீன் இனத்திற்கு ‘தமிழகம்’ என பெயர் சூட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article