
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் கண்ணன் இன்று (15.5.2025) காலை மது போதையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. மேலும் அநாகரீகமாக நோயாளிகளிடம் பேசி உள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு அவரை வெளியேற்றியுள்ளனர். எனவே மருத்துவர் கண்ணன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.