![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/03/37262335-dhu.webp)
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும்.
கடைசியாக லக்கி பாஸ்கர் படத்தில் நடித்திருந்த துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் புதிய படம் 'ஆகாசம்லோ ஒக்க தாரா'. நேற்று இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் நாயகியாக சாட்விகா வீரவள்ளி நடிக்கிறார். இதன் மூலம் இவர் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தநிலையில், தற்போது படப்பூஜையுடன் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது. இப்படத்தினை பவன் சடிநேனி இயக்குகிறார். இப்படமும் தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.