'துருவ நட்சத்திரத்தின் தாமதத்திற்கு இதுதான் காரணம்' - கவுதம் வாசுதேவ் மேனன்

5 hours ago 3

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரிது வர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே மலையாளத்தில் நடிகர் மம்முட்டி தயாரித்து நடித்துள்ள 'டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் துருவ நட்சத்திரம் படம் பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கவுதம் வாசுதேவ் மேனன், ''துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் சூழ்நிலையில் இருக்கும்போது யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்கொள்ளவில்லை. தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் லிங்குசாமி ஆகிய இருவர் மட்டுமே எனக்கு கால் செய்து பேசினர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. தாமதத்திற்கு இதுதான் காரணம்,'' எனக் கூறியுள்ளார்.

Read Entire Article