தும்கூரு பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், திறன் மேம்பாட்டுத் துறை, திறன் மேம்பாட்டுக் கழகம், மாவட்ட திறன் இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஆகியவற்றின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் சுபா கல்யாண் பேசுகையில், ‘வேலைவாய்ப்பு மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் தங்களின் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப வேலைகளை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது,’ என்றார். நடந்த வேலை வாய்ப்புக் முகாமில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிலருக்கு அந்த இடத்திலேயே வேலை வழங்கப்பட்டது, மற்றவர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் நடத்திய பிறகு அடுத்த நிலை தகுதிக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிறுவனங்கள் பங்கேற்றன. வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் கே.ஜி.பரசுராம் கூறுகையில், ‘மாவட்டத்தில் இம்முறை 11 ஆயிரம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து, ஒன்றரை ஆயிரம் பேர் மட்டுமே உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். மீதியை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.
The post தும்கூரு பல்கலை. வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.