
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் காவலர் அபிநயா. இவர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில் திடீரென பெண் காவலர் அபிநயா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.