துபாய் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அதிபருக்கு எலும்பு முறிவு: கால் இடறி விழுந்ததால் விபத்து

3 months ago 15

துபாய்: துபாய் விமான நிலையத்தில் கீழே விழுந்த பாகிஸ்தான் அதிபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சையில் உள்ளார்.  பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (69) உடல் நலப் பிரச்னைகள் இருப்பதால் அவ்வப்போது துபாய் சென்று சிகிச்சை பெற்று வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது, திடீரென கால் இடறி கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிபர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர், அவரது காலில் கட்டுப் போட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் ஓய்வில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக கடந்த 2023 மார்ச் மாதம் அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக 2022ம் ஆண்டில், மார்பு தொற்று சிகிச்சைக்காக கராச்சியில் உள்ள ஜியாவுதீன் மருத்துவமனையில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post துபாய் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அதிபருக்கு எலும்பு முறிவு: கால் இடறி விழுந்ததால் விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article