திருமயம் நவ.28: தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து அவரது பிறந்தநாள் நேற்று திமுக நிர்வாகிகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் குழிபிறையில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல் திருமயம் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக திருமயம் திமுக அலுவலகம் எதிரே கட்சி கொடி ஏற்றப்பட்டு திருமயம் கடைவீதி பகுதியில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் வழங்கி துணை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் மாவட்ட அவை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி துரைராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post துணைமுதல்வர் பிறந்த நாளை திருமயம் ஒன்றிய திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர் appeared first on Dinakaran.