துணை முதல்வர் பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

2 months ago 10

 

மதுரை, டிச. 9: மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு தொகுதி வண்டியூர் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழாவை முன்னிட்டு 1.50 லட்சம் பேருக்கு கடந்த 25ம் தேதி முதல் நாள் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட வண்டியூர் பகுதியில் வீடு வீடாக சென்ற மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பொது மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட பொருட்கள் மற்றும் முதல்வர், துணை முதல்வர் படத்துடன் கூடிய 2025ம் ஆண்டுக்கான காலண்டர்களை வழங்கினார். பின்னர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிட்டம்பட்டி, காயம்படி மேடு மற்றும் காயம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று, அங்கு வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் அ.பா.ரகுபதி, பகுதி செயலாளர் பாண்டியராஜன், மாமன்ற உறுப்பினர்கள் துரைப்பாண்டியன், கதிரவன், வட்டச் செயலாளர்கள் வெங்கடேசன், பொன்குமரன், இளைஞரணி திருமலைராஜன், பொறியாளர் அணி பிரதீப், மாணவர் அணி ஏகநாத், தொண்டர் அணி பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post துணை முதல்வர் பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article