துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 47 நாள் தொடர் நிகழ்ச்சிகள்: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

3 months ago 15

திருவள்ளூர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் தொடக்க விழாவை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்து இரவு படிப்பகத்தை திறந்து வைத்து மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் துணை முதல்வரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, அக்னி ராஜேஷ், தே.பிரியாகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமாமகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

மேலும், விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் புல்லரம்பாக்கம் கிராமத்தில் இரவு படிப்பகத்தை திறந்து வைத்தும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும், தூய்மை பணியாளர்களுக்கு ரெயின் கோட்டுகளும், பெண்களுக்கு புடவைகளும் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றிய, நகர செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, பொதுகுழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.விமல்வர்ஷன், ஒன்றிய நிர்வாகிகள் விமலா குமார், ஈக்காடு கே.முகமதுரபி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், மாவட்ட அமைப்பாளர்கள் பி.கே.இ.கபிலன், வே.தியாகராஜன், வழக்கறிஞர் பி.கே.இ.நாகராஜ், சுமன், இளையராஜா, ராஜாராம், ராஜ்மோகன், ஜெனாபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 47 நாள் தொடர் நிகழ்ச்சிகள்: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article