சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்று (15.11.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் வாலாஜா சாலை போக்குவரத்து சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச். சாலையில் இருந்து பெரியார் சாலை வரையிலும், சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு வரையிலும், காந்தி மண்டபம் சாலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரையிலும், கிரீன்வேஸ் சாலையில் ஃபோர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க. பாலம் வரையிலும் உள்ள பேருந்து போக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
The post துணை முதல்வர் உதயநிதி தலைமையில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை appeared first on Dinakaran.