துணை முதல்வரின் துணை செயலாளர் ஆனார் ஆர்த்தி ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

7 months ago 20

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆணையரும், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சி.சமயமூர்த்தி, மனித வள மேலாண்மைத்துறை செயலாளராகவும், தேசிய சுகாதார இயக்கக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராகவும், முன்னாள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராகவும், சமக்ர சிக்சா திட்ட மாநில இயக்குனர் எம்.ஆர்த்தி, துணை முதல்வரின் துணை செயலாளராகவும், தமிழக சுகாதார திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், தேசிய சுகாதார இயக்கக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post துணை முதல்வரின் துணை செயலாளர் ஆனார் ஆர்த்தி ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article