துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

3 months ago 24

சென்னை,

தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* உயர்கல்வித்துறை செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

* மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மின் வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் சத்ய பிரதா சாகு கூடுதலாக கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் செயலாளராக அமுதவள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சமூக நல துறையின் ஆணையராக லில்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதியின் துணை ஆணையராக பிரித்திவிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையராக சுந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஜவுளித்துறை இயக்குனராக லலிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article