சென்னை,
அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
தமிழ்நாட்டின் துணை முதல்அமைச்சராக பதவியேற்கவிருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் , உதயநிதி ஸ்டாலினுக்கும் மற்றும் புதிதாக பதவியேற்கவிருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்பேற்ற அனைத்துத் துறையியிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி, அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின் . அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பால் மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும், மக்கள் பயன்பெறும் பல புதிய திட்டங்களையும் கொண்டு வருவார் என உறுதியாக நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.