துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்: கமல்ஹாசன் வாழ்த்து

6 months ago 42

சென்னை,

அமைச்சராக இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 

வாழ்த்துகள் உதயநிதி நீங்கள் துணை முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளீர்கள். நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்களுக்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என தெரிவித்துள்ளார். 

Read Entire Article