துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!

3 months ago 21

சென்னை: துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் இனிப்புகளை வழங்கி, பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம்: புதிய துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நால்வருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. தலைவர் அன்புமணி: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோதிமணி: இளம் வயதில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான்: தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல், சமூக நலத்துறை மற்றும் மக்களின் நன்மைக்காகச் செய்த உழைப்பின் அங்கீகாரம் இந்த உயர்ந்த பதவி தங்களுக்கு கிட்டி இருக்கிறது. உங்கள் அனுபவமும், ஊக்கமும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும். உங்கள் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்கள் நலனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் திரைபிரபலங்கள் பலர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குனர்கள் போனி கபூர், மாரிசெல்வராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், கார்த்தி, நடிகை நித்தி அகர்வால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து! appeared first on Dinakaran.

Read Entire Article