துணை ஜனாதிபதி வருகை சென்னை விமான நிலையம் இசிஆரில் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

3 hours ago 1

சென்னை: துணை ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவதையடுத்து விமான நிலையம்- கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: இந்திய துணை ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சர் இன்று சென்னை வருவதை கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தை சுமுகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் இசிஆர் வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

The post துணை ஜனாதிபதி வருகை சென்னை விமான நிலையம் இசிஆரில் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article