துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் ரேங்க்கை பிடித்து மாணவி அசத்தல்

1 week ago 4

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டது முதல் ரேங்க்கை மாணவி பிடித்து அசத்தியுள்ளார்.

வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.இந்த தேர்வு எழுத 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என 3 கட்டமாக தேர்வு நடந்தது. கடந்த 3 நாட்களாக நடந்த நேர்முகத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. 190 பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 189 பேரின் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 (நேர்முகத் தேர்வு பணிகள்) நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அளவில் மொத்தம் 190 தேர்வர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர். இதில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்ற 121 மாணவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர்.

இந்நிலையில் குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் அனைத்து மையங்களிலும் பயிற்சி பெற்ற மாணவர்களில் மொத்தம் 47 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது தமிழக அளவிலான மொத்த தேர்ச்சி விகிதத்தில் 50% சதவீதத்திற்கும் மேலாகும். இதில் முதல் ரேங்கை கதிர் செல்வியும், 3வது ரேங்கை ஹரி ப்ரியங்கா, 4வது ரேங்கை கேரனா புக் லித்தியாவும் பிடித்துள்ளனர். 7வது இடம் லார்ஷன் இஸ்ரேல், 8வது இடம் டியூக் பார்க்கர் ஆகியோர் எங்கள் மையத்தில் படித்தவர்கள் ஆவர்.
இவ்வாறு அவர் கூறினார்

The post துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் ரேங்க்கை பிடித்து மாணவி அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article