அரியலூர், மே 5: தமிழக மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.இந்த தேர்வு அரியலூா் மாவட்டம், காத்தான் குடிகாடு அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மையத்தில் 480 பேரும், கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 360 பேரும், அரியலூா் மாவ ட்ட மாதிரிப் பள்ளியில் (கீழப்பழுவூா்) 240 பேரும், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 140 பேரும், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 360 பேரும், அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் 360 பேரும் என மொத்தம் 1,940 போ் எழுத பதிவு செய்தனர்.
இதையொட்டி மைய ங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் அனைவரையும் முழுமையாக பரிசோதனை செய்த பிறகே தோ்வு எழுத அனுமதிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 6 தேர்வு மையங்களிலும் 1890 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார். 50 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் அனைவரும் முழு பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
The post தீர்மானங்கள் நிறைவேற்றம் அரியலூரில் 6 மையங்களில் 1940 பேர் நீட் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.