தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா? அரசு ஆலோசித்து வருவதாக தகவல்

3 months ago 21

சென்னை,

தமிழகத்தில் வரும் 31 -ம் தேதி  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு உள்ள பலரும் ரெயில், பஸ் என அனைத்திலும் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை  வருகிறது. அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை பணி நாளாகும்.பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி அன்றே கிளம்ப வேண்டியிருக்கும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவித்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால், வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளியன்று அரசு விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையாக கிடைக்கும்.

சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப முடியும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இதனால்,  தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக தமிழக அரசு, ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  எனவே, வரும் 1 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Read Entire Article