தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை

3 weeks ago 4

 

பெரம்பலூர், அக்.26: பெரம்பலூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையின் மோப்ப நாய் படைப் பிரிவினர், வெடிகுண்டுகளை கண்ட றிந்து அகற்றும் குழுவினர் முக்கிய இடங்களில் திடீர் சோதனைகளை மேற் கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்பேரில், பெரம்பலூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நகரத்தின் பல முக்கியப் பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆயுதப்படை வளாகத்திலுள்ள மோப்ப நாய் படை பிரிவினர் (Gog squad) மற்றும் வெடி குண்டுகளை கண்டறிந்து அதனை அகற்றும் குழுவினர் (BDDS) ஆகிய இரண்டு குழுவினரும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, நான்கு ரோடு, பாலக்கரை ஆகிய இடங்களில் மோப்ப நாய் சக்தியைக் (Explosive Dog) கொண்டு வெடிகுண்டு சோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் கண்கா ணிக்கவும், குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரம்பலூல் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article