தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!

3 weeks ago 5

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள அந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப் படுகிறது. பொதுமக்கள் விமானங்கள், பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஓர் திரும்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கான விமான கட்டணம் அதிகரித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து செல்லும் விமான கட்டண விவரம்;
*தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,109; இன்று ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை வரை கட்டணம்

உயர்வு

* கோவைக்கு ரூ.3,474-ஆக இருந்த கட்டணம் இன்று ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை உயர்வு

* சேலத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.3,300 கட்டணம்; இன்று ரூ.8,353 முதல் ரூ.10,867 வரை உயர்வு

* மதுரைக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்வு

* திருச்சிக்கு ரூ.2,382-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை உயர்வு

* கொச்சிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.2,592; இன்று ரூ.4625 முதல் ரூ.6510 வரை விமான கட்டணம் உயர்வு

* டெல்லிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.5,475; இன்று ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை கட்டணம் வசூல்

* கொல்கத்தாவிற்கு சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.4,599-ஆக இருந்த நிலையில் இன்று ரூ.11,296 முதல் ரூ.13,150 வரை வசூல்

* ஹைதராபாத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.2,813 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இன்று ரூ.3,535 முதல் ரூ.7,974 வரை வசூல்

* அந்தமானுக்கு ரூ.5,479-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.9,897 முதல் ரூ.10,753 வரை உயர்வு

* திருவனந்தபுரத்திற்கு ரூ.3,477-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.6,185 முதல் ரூ.18,501 வரை வசூல்

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article