மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் மும்பையில் 2 நாள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், “ தீபாவளி, மற்றும் சத் பூஜை ஆகியவற்றை மனதில் வைத்து தேர்தல் தேதியை அறிவிக்குமாறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைப்படியே தேர்தல் தேதி நவ.26க்கு முன்பு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
The post தீபாவளி பண்டிகையை பாதிக்காமல் மகாராஷ்டிராவில் நவ.26க்கு முன் தேர்தல் appeared first on Dinakaran.