தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் கடைகளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

3 months ago 15

சென்னை: தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

கடந்த 2023 ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களாக அரசு மதுபானக் கடைகளில் 467.69 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. மேலும் இது பெரும் பேசு பொருளாக மாறியது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 30,31 ஆகிய தேதிகளில் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.29.16 கோடி குறைவாகும்.

The post தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் கடைகளில் வசூல் எவ்வளவு தெரியுமா? appeared first on Dinakaran.

Read Entire Article