தீபாவளி பண்டிகை எதிரொலி சென்னை – மதுரை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

3 months ago 12

மதுரை: தீபாவளி பண்டிகையை நாளை மறுநாள் (அக். 31) கொண்டாடுவதற்காக சென்னையிலுள்ள பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், சென்னை – மதுரை இடையே விமான கட்டணம் இன்றும், நாளையும் (அக். 29, 30) மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக ரூ.4,500க்கு விற்கப்படும் சென்னை – மதுரை விமான டிக்கெட், இந்த இரு நாட்களில் ரூ.12 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல் சொந்த ஊரிலிருந்து தீபாவளி முடித்து சென்னை திரும்புபவர்களுக்கு வரும் ஞாயிறன்று (நவ. 3) கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான பயணிகள் கூறுகையில், ‘‘ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவதை அரசு கண்காணிக்கிறது. இதே போல் விமான கட்டணங்களும் உயர்த்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு தலையிட்டு கட்டண உயர்வை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post தீபாவளி பண்டிகை எதிரொலி சென்னை – மதுரை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article