சென்னை: தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தீபாவளியை ஒட்டி பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிறுவனம் கூறியதாவது; மெட்ரோ ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2.50 லட்சமாக இருந்த தினசரி பயணிகள் எண்ணிக்கை தற்போது 2.80 லட்சம் முதல் 3 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், மற்ற நாட்களைவிட பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகபட்சமாக 3.5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரோ ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தீபாவளி பண்டிகை எதிரொலி.. கூட்ட நெரிசலை தவிர்க்க 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்..!! appeared first on Dinakaran.