தீபாவளி பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

2 months ago 13

உளுந்தூர்பேட்டை,

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மக்கள் வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடுவது வழக்கம். எனவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. வழக்கமாக ரூ.5 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும் நிலையில் இன்று விற்பனை சூடுபிடித்துள்ளது. இதானால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என இருவகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், இறைச்சிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கி சென்றனர். கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினர். ஆட்டின் உயரம், எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது.

Read Entire Article