தீபாவளி நெருங்கும் நிலையில் பிரபல துணிக்கடையில் திடீர் சோதனை: வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி

3 months ago 21

திருவள்ளூர்: தீபாவளி நெருங்கும் நிலையில் திருவள்ளூரில் உள்ள பிரபல துணிக்கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக திடீர் சோதனை மேற்கொண்டனர். மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள 2 இடங்களில் இயங்கி வரும் பிரபல துணிக்கடைகளில் நேற்று வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 4 கார்களில் சென்னையில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வணிகவரித்துறை அதிகாரிகள், துணிக்கடையின் ஷட்டர்களை மூடிக்கொண்டு கடையில் வாங்கப்பட்ட துணிகளுக்கு முறையாக ஜிஎஸ்டி பில் உள்ளதா? எவ்வளவு ரூபாய்க்கு துணி வாங்கப்படுகிறது? எவ்வளவு ரூபாய்க்கு துணி விற்கப்படுகிறது? என்பது குறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும் தீபாவளி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து விழாக்காலம் வரவிருப்பதால் பொது மக்கள் அதிகளவில் குவிந்து புத்தாடைகளை வாங்கிச் செல்லும் நிலையில், தரமான துணிகளை விற்பனை செய்கிறார்களா? அல்லது எக்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து விலை மலிவான துணிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களா? என்றும் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் உள்ள கம்ப்யூட்டரில் வாங்கப்பட்டுள்ள மற்றும் விற்கப்பட்டுள்ள பில்லை அவர்கள் ஆய்வு செய்தனர்.

காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணியைத் தாண்டியும் தொடர்ந்து நடைபெற்றது. முழுசோதனை முடிந்தபிறகே விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post தீபாவளி நெருங்கும் நிலையில் பிரபல துணிக்கடையில் திடீர் சோதனை: வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article