2024ம் வருட தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. சென்ற வாரம் முழுக்கவே இணையம் தீபாவளி அப்டேட்ஸ், மீம்கள், ஜோக்ஸ், ஷாப்பிங் குறித்த தகவல்கள், மற்றும் புதுப்படங்கள் குறித்த கருத்துகள், விமர்சனங்கள் ஒரு பக்கம் என எங்கும் தீபாவளிதான் வைரல். மேலும் மாதக் கடைசியில் இம்முறை தீபாவளி வந்ததன் விளைவால் அதனை கேலி, கிண்டல் செய்யும் பொருட்டு ஏராளமான மீம்களையும் தெறிக்க விட்டனர் நெட்டிசன் குறும்பர்கள். தெருக்கள், டிவி சேனல்கள், ரேடியோ, புத்தகங்கள், இணையம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஆபர்கள் குறித்த விளம்பரங்கள்தான் நிரம்பி வழிந்தன. என்னதான் AI யுகமானாலும், அறிவியல் வளர்ந்தாலும் இன்னமும் நம் வழக்கம் மாறாமல் இப்படியான பண்டிகைகளைக் கொண்டாடுவதுதான் இந்தியர்களின் சிறப்பு எனலாம்.
ஒரு தொழிலாளியின் தேச பக்தி!
மனதைக் கவரும் ஒரு கிளிப் இணையத்தில் பரவி வருகிறது. இது இணையத்தில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வீடியோவில் ஒரு தொழிலாளி ஏதோ ஒரு பள்ளியின் சுவர்களுக்கு பெயின்ட் அடித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பின்னணியில் ஒலிக்கிறது. கிட்டத்தட்ட உயிருக்கு சற்றே ஆபத்தான உயரத்தில் நிற்கிறார் அந்தத் பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. ஆனால் தேசிய கீதம் ஒலிக்கத் துவங்கியவுடன் தொழிலாளி தனது வேலையை நிறுத்திவிட்டு 52 வினாடிகள் தேசிய கீதத்திற்காக அசையாமல் நிற்கிறார். அதே வீடியோவில் பள்ளி மாணவர்கள் சிலர் தேசிய கீதத்தை மதிக்காமல் நடந்து சென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். அவர்கள் யாரும் தேசிய கீதத்திற்கு கவனம் செலுத்தவோ மரியாதை கொடுப்பது குறித்தோ கவலைப்படவில்லை. இந்த கிளிப் 37 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் எண்ணிக்கையைப் பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
The post தீபாவளி நிறைவு! appeared first on Dinakaran.