தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை அறிவிப்பு: அதிகாரிகள் தகவல்

3 months ago 20

சென்னை: அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை வியாழகிழமை வருகிறது. அரசு விடுமுறை. அதன் பின்னர் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்தால், இடையில் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொள்ள பலரும் திட்டமிட்டுள்ளனர். அதனால் அக். 31, நவம்பர் 1, 2, 3 என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், வெளியூர் பயணங்களுக்கும் திட்டமிடுவர். அந்த வாரத்தில் புதன் அல்லது வியாழன் அன்றே புறப்பட்டு செல்ல பேருந்துகள், ரயில்களில் டிக்கெட்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு இதுவரை 65 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் 15ம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டு அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும், பிற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் திரும்பும் வகையில் அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை அறிவிப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article