கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் தீபாவளி கொண்டாடுகிறோம் என்ற பெயரில், சாலையை மறித்து, இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஹாரன் அடித்தனர்.
ஒரே மாதிரியான வண்ண உடைகளை அணிந்து இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் முன்பாக இரு சக்கர வாகனங்களை நிறுத்தி, மற்ற வாகனங்களுக்கு வழி விடாததால், அவர்களும் ஹாரன் அடிக்கவே, ஒலி மாசு காதுகளை ரணமாக்கியதாக அங்குள்ளவர்கள் புகார் கூறி உள்ளனர்.