பெண்களுக்கு…
வழக்கம் போலவே இந்த வருடம் புடவைகள் விதவிதமாக ரகமாக களமிறங்கி இருக்கின்றன. ஒரு பக்கம் ‘மட்ட’ பாடலில் த்ரிஷா, இன்னொரு பக்கம் மஞ்சுவாரியர் ‘மனசிலாயோ’ என நடனமாட மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புடவைகள் பல கடைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் சிவப்பு அல்லது மெரூன் சேலைகளில் ஓரத்தில் எம்பிராய்டரி அல்லது சிம்பிள் தங்க நிற ஜரிகை டிசைன் இந்த வருடம் ஹாட் சாய்ஸ். அதற்கு மேட்சிங் ஆக எம்ராய்டரி செய்யப்பட்ட பிளவுஸ் இந்த வருடம் டிரெண்ட். சல்வார்களில் அலியா கட் அல்லது ஸ்ட்ரைட் கட் சல்வார்கள் இந்த வருடமும் தொடர் ட்ரெண்டிங்கில் உள்ளன. உடன் இந்த வருடம் டெனிம் பேன்ட்களுக்கு மாட்சிங் குர்தாக்களும் சைட் கட், சைட் ஸ்லிட் வகைகளில் நிறைய பார்க்க முடிகிறது. போலவே காட்டன் மிடி கவுன்களும் அதிகம் களமிறங்கி இருக்கின்றன. களம்காரி மற்றும் காட்டன் லெகங்காக்கள் எம்ராய்டரி மற்றும் ஜர்தோசி, ஆரி வேலைப்பாடுகளுடன் விற்பனைக்கு இருப்பதை பார்க்க முடிகிறது. காரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாகவே பெண்கள் அதிகம் காட்டன் உடைகளையே தேர்வு செய்கிறார்கள். போலவே அலுவலகம் செல்லும் பெண்கள் பிசினஸ் வுமன்கள் அதிகரித்து வருவதால் கிராண்ட் உடைகளைவிட ஃபார்மல் மற்றும் கேஷுவல் உடைகள் இந்த வருடம் அதிகம் மார்க்கெட்டில் இடம் பிடித்திருக்கின்றன. அதேபோல் ரெடி டு வேர் புடவைகள் வருகையும் அதிகரித்திருக்கிறது. அதிலும் இந்த வருடம் ஓணம் புடவைகளிலேயே இந்த ஐந்து நிமிட புடவைகள் அதிகம் மார்க்கெட்டில் பார்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பெண்கள் அணியும் பட்டியாலா ஸ்டைல் பாட்டம்களும் பெண்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அதாவது மேலிருந்து அகலமாக குறுகி, சரியாக கணுக்காலில் ஒரு பட்டை நிற டிசைன் கொடுத்து அணித்து கொள்ளும் வகை அலாவுதீன், அலிபாபா ஸ்டைல் பேன்ட்கள் வரவு அதிகமாக
உள்ளன. மழை, எங்கே பார்த்தாலும் ரோடு , மெட்ரோ பணிகள் என பெண்கள் இந்த அங்கிள், மற்றும் கணுக்காலுடன் நிற்கும் பாட்டம்களுக்கும், ஜீன்ஸ்களுக்கும் டிக் அடிக்கிறார்கள்.
ஆண்களுக்கு…
கிராப்ட் ஆங்கிள் பேன்ட், அவனுடன் இணைந்த டி-ஷர்ட் மற்றும் கேஷுவல் சட்டைகள் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டில் இருக்கின்றன. செலிப்ரிட்டி மற்றும் மாடல்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்திய ஃபியூஷன் ஷெர்வானி மற்றும் குர்தா உடைகள் தற்போது ரெடிமேட் ரகங்களாகவும் விற்பனைக்கு இருக்கின்றன. இரண்டு வருடங்களாகவே வெள்ளை வேஷ்டி சட்டை கிளாசிக் எனில் அதனுடன் இணைந்த கோல்டன், சில்வர், காப்பர், பிஸ்தா பச்சை, மற்றும் பிங்க் நிற பட்டு வேஷ்டி சட்டைகளும் ட்ரெண்டில் இருக்கின்றன. அதிலும் ஆண்களும், பெண்களும் அலுவலக விழாக்கள் மற்றும் தீபாவளி கொண்டாட்டம் என வெல்குரோ வேஷ்டி, புடவைகளை தான் தேர்வு செய்கிறார்கள். இவர்களுக்கான ஜீன்ஸ் பேன்ட்கள் வழக்கம் போல் ஆங்கிள் பேன்ட் , ஸ்ட்ரைட் கட், பூட் கட் பேன்ட்கள் எப்போதுமான ட்ரெண்டில் தொடர்கின்றன.
குழந்தைகளுக்கு…
இந்த முறை டெனிம் அதிகம் கலந்த கவுன்களும் மினி ஸ்கர்ட் மற்றும் டீ சர்ட்களும் குழந்தைகள் ரெடிமேட் உடைகளில் அதிகம் காண முடிகிறது. அதேபோல இப்போதைய வெயிலை தாக்குப் பிடிக்க ஏதுவாக பருத்தி மற்றும் ஆர்கானிக் உடைகள் குழந்தைகளுக்கு அதிகமாக வரத்துவங்கி இருக்கின்றன. அதிலும் வாழைநார், வேம்பு, ஆகாயத்தாமரை நார் உள்ளிட்ட தாவரம் சார்ந்த நூல்களில் நெய்யப்பட்டார் உடைகள் வரவு அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கான காலணிகளும் கூட அதிகம் பிளாஸ்டிக் கலக்காத எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையறாக்களாகவே அதிகம் மார்க்கெட்டில் காண முடிகிறது.
நகைகள் மற்றும் காலணிகள்
இம்முறை ஆன்ட்டிக் கலெக்சன் நகைகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஃபேன்சி நகைகள் ஆனாலும் சரி தங்கம், வெள்ளி நகைகள் ஆனாலும் சரி ஆன்ட்டிக் அல்லது பழமையான டிசைன்களில் அதிகம் வாங்குகிறார்கள். டிராவல் அதிகம் செய்யும் பெண்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் அதிகரிக்க துவங்கியதால் ஹீல்ஸ் மற்றும் ஹை ஹீல்ஸ் காலணிகளின் பயன்பாடு குறைந்து பிளாட் காலணிகள், குஷன் காலணிகள், சாண்டல்கள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆண்களும் இதே பாணியில் சாண்டல் செருப்புகள் மற்றும் பிளாட் காலணிகளில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஷூ பயன்பாடு சற்று குறைந்து காணப் படுகிறது. அலுவலகம் மற்றும் அலுவலக மீட்டிங் தவிர ஏனைய இடங்களில் கேஷுவல் காலணிகளைதான் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.
ஷாப்பிங்
வழக்கம் போலவே நேரடியாக சென்று ஷாப்பிங் செய்யும் பழக்கம் இருப்பினும், அந்த மக்களை விட ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக இந்த வருடமும் உயர்ந்திருக்கிறது. அதற்கேற்பவே அனைத்து முன்னணி ஷாப்பிங் தளங்களும் விழாக்கால சலுகைகள் சகிதமாக 10 முதல் 90 சதவீதம் வரையிலும் ஆஃபர்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் ஷாப்பிங்குகளும் தற்போது ஆன்லைனிலேயே நடக்கத் துவங்கி விட்டன. காரணம் ஈசி எக்ஸ்சேஞ்ச், சுலபமான தவணை, 0% வட்டி, பேலேட்டர், உடனடி ரிட்டர்ன் உள்ளிட்ட பல வசதிகள் ஆன்லைன் ஷாப்பிங்கில் இருப்பதால் மக்கள் அதிகம் ஆன்லைன் ஷாப்பிங்கைத்தான் விரும்புகிறார்கள்.
– ஷாலினி நியூட்டன்.
The post தீபாவளி 2024 appeared first on Dinakaran.