
சென்னை,
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது திரையுலகில் 22 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார். கடந்த 2003-ம் ஆண்டு ராகவேந்திர ராவ் இயக்கத்தில் வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அல்லு அர்ஜுன்.
அதனைத்தொடர்ந்து, ஆர்யா, பருகு, பன்னி, ஜூலாய், ரேஸ் குர்ரம், S/o சத்யமூர்த்தி, சர்ரைனோடு, அல வைகுந்தபுரமுலு, மற்றும் புஷ்பா ஆகியவை அல்லு அர்ஜுனின் கெரியரில் சிறந்த படங்களாக அமைந்தன.
தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் அல்லு அர்ஜுன். புஷ்பா தி ரைஸில் அவரது நடிப்பு அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்தது.
சமீபத்தில் வெளியான அவரது பான்-இந்தியா படமான 'புஷ்பா தி ரூல்', தங்கலுக்குப் பிறகு அதிக வசூல் செய்த இரண்டாவது இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீயுடன் விரைவில் இணையவுள்ளார்.