திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை

7 months ago 60

தென் கொரிய வீராங்கனை கிம் யே ஜி, "கிரஷ்" என்ற சர்வதேச தொடரில் கொலையாளியாக நடிக்கவுள்ளார். இந்த தொடரில் கிம்முடன் இணைந்து நடிப்பவர், இந்திய தொலைக்காட்சி நடிகை அனுஷ்கா சென். "கிம்-அனுஷ்கா கொலைகார இரட்டையர்களாக சக்கைப்போடு போடுவார்கள்" என்று "கிரஷ்" தொடரின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு கோடி பாலோயர்களை வைத்துள்ள கிம் இதுகுறித்து கூறியபோது, "எனது முக்கிய குறிக்கோள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவதுதான். படப்பிடிப்பு ஒருபுறம் நடந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப், இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்வேன். மேலும் நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து முன்னேறி, புதிய உயரத்தை அடைய விரும்புகிறேன்" என்று கூறினார்.

Read Entire Article