திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளி இன்று திறப்பு

1 week ago 2

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 25-ந்தேதி திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 45 மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். பின்னர் கடந்த 4-ந்தேதி, பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட போதும் 2-வது முறையாக ரசாயன கசிவு ஏற்பட்டு 9 மாணவிகள் மயங்கினர்.

இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீண்டும் பள்ளியில் ஆய்வு செய்து காற்றின் தரத்தை கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி வளாகத்திலேயே நிறுத்தி கண்காணித்தனர். இதில் கடந்த 4-ந்தேதி மாணவிகளுக்கு இடைவேளை விட்ட நேரத்தில் 10.40 மணி முதல் 10.50 மணிக்கு ரசாயன கசிவு ஏற்பட்டு தெரிய வந்தது. இதற்கிடையே பள்ளிக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம், பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோருடன், கலந்தாலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில் நடைபெற்றது. இதில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து பெற்றோர் ஒத்துழைப்புடன் இன்று பொதுத்தேர்வு எழுத கூடிய, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ் - 2 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மற்ற வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்படும் என்றும், பெப்பர் ஸ்பிரே குறித்து, போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரசாயன கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி 18 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. 

Read Entire Article